< Back
தேசிய செய்திகள்
பெரியார் முகம் பொறித்த  செங்கோலை வாங்க மறுத்த கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா..!
தேசிய செய்திகள்

பெரியார் முகம் பொறித்த செங்கோலை வாங்க மறுத்த கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா..!

தினத்தந்தி
|
18 Jun 2023 9:26 AM IST

பெரியார் முகம் பொறித்த செங்கோலை வாங்க கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மறுப்பு தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து கர்நாடகாவின் முதல்-மந்திரியாக சித்தராமையா, துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவியேற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க, தமிழகத்தை சேர்ந்த சமூகநீதி பேரவை என்ற அமைப்பினர் சென்றிருந்தனர்.

அப்போது சித்தராமையா, மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதாக கூறி, பெரியார் முகம் பொறித்த செங்கோலை வழங்கினர். இதனை வாங்க மறுத்த சித்தராமையா, "செங்கோல் என்பது அரச மரபை போற்றும் ஒன்று. அதனாலேயே பாஜக, நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பதை எதிர்த்தோம் என்று விளக்கம் அளித்து, செங்கோலை வாங்க மறுத்தார்.




மேலும் செய்திகள்