< Back
தேசிய செய்திகள்
கர்நாடக சட்டசபை தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
தேசிய செய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
13 April 2023 12:39 AM IST

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது.

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ஆளும் பா.ஜனதா கட்சி 189 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளன.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். 21-ந்தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. 24-ந்தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

மேலும் செய்திகள்