கர்நாடக சட்டசபை தேர்தல் - 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்..!
|கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வெளியிட்டுவிட்டது. அதில் 124 தொகுதிகளுக்கு வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக அகில இந்திய காங்கிரசின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் 2 நாட்கள் நடைபெற்றது.
இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான, 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 124 பேர் கொண்ட முதல் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், 42 பேர் கொண்ட 2-வது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சித்தராமையா போட்டியிட விரும்பிய கோலார் தொகுதி குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
மேலும் மீதமுள்ள 58 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் இந்த வாரம் இறுதியில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.