< Back
தேசிய செய்திகள்
கர்நாடகா சட்டசபை: 24 பேர் மந்திரிகளாக பதவியேற்பு...!

Image Courtesy: @ANI

தேசிய செய்திகள்

கர்நாடகா சட்டசபை: 24 பேர் மந்திரிகளாக பதவியேற்பு...!

தினத்தந்தி
|
27 May 2023 12:13 PM IST

கர்நாடகத்தில் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. கர்நாடக முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். அப்போது 8 பேர் மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்திவந்த நிலையில், இன்று புதிதாக 24 பேர் மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட 24 பேர் மந்திரிகளாக பதவியேற்கின்றனர். மேலும், மகாதேவப்பா, எச்.கே.பாட்டீல், மது பங்காரப்பா, உள்ளிட்டோரும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் புதிய மந்திரிகளாக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

மேலும் செய்திகள்