< Back
தேசிய செய்திகள்
கர்நாடகா: உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் விபத்து- 7 பேர் பலி
தேசிய செய்திகள்

கர்நாடகா: உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் விபத்து- 7 பேர் பலி

தினத்தந்தி
|
7 Dec 2023 7:05 PM IST

அலட்சியம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்மை காரணமாக குடோனின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் விஜயபுரா நகரில் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் சுமார் 400 டன் அளவிலான மக்காச்சோளங்களை கொண்ட சேகரிப்பு தொட்டி ஒன்று திடீரென சரிந்தது.

அப்போது அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் 8 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டர். அவர்களில் 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பீகாரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அலட்சியம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்மை காரணமாக குடோனின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் தலா 5 லட்சம் ரூபாயும், கர்நாடக அரசு தரப்பில் 2 லட்சம் ரூபாயும் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்