< Back
தேசிய செய்திகள்
மராட்டியம்:  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கராத்தே பயிற்சியாளர் கைது

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

மராட்டியம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கராத்தே பயிற்சியாளர் கைது

தினத்தந்தி
|
7 Jun 2022 12:05 AM IST

மராட்டியத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுகை செய்த கராத்தே பயிற்றுவிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாக்பூர்,

மராட்டியத்தில் 11 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கராத்தே பயிற்றுவிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் கன்ஹானில் விவேகானந்த் நகரில் வசிக்கும் கோபால் (வயது 40) என்பது தெரியவந்தது.

இவர், கடந்த வியாழன் அன்று அதிகாலை 4.30 மணியளவில் கராத்தே வகுப்பு என்று கூறி 11 வயது சிறுமியை ஜபல்பூர் சர்வீஸ் சாலைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசிடம் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியாக கராத்தே ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.

மேலும் செய்திகள்