< Back
தேசிய செய்திகள்
தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ஆதரவு குஷ்புவுக்கு கபில் சிபல் கண்டனம்
தேசிய செய்திகள்

'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு ஆதரவு குஷ்புவுக்கு கபில் சிபல் கண்டனம்

தினத்தந்தி
|
10 May 2023 10:10 AM IST

“தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்துகிறவர்கள், எதைக் கண்டு பயப்படுகின்றனர் என்று தெரிய வில்லை என கபில் சிபல் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர், "தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்துகிறவர்கள், எதைக் கண்டு பயப்படுகின்றனர் என்று தெரிய வில்லை. எதைப் பார்க்க வேண்டும் என்பதில் மக்களைத் தீர்மானிக்க விடுங்கள், நீங்கள் மற்றவர் களுக்காக தீர்மானிக்க முடியாது" என கூறி உள்ளார். இதற்கு முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யு மான கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

பா.ஜ.க.வின் குஷ்பு, 'தி கேரளா ஸ்டோரி' படத்தைப் பொறுத்தமட்டில், எதைப் பார்க்க வேண்டும் என்பதை மக்களைத் தீர்மானிக்க விடுங்கள், மற்றவர்களுக்காக நீங்கள் தீர்மானிக்க முடியாது என்கிறார். அப்படியென்றால் அமீர்கானின் பி.கே., ஷாருக்கானின் பதான், பஜ்ராவ் மஸ்தானி படங்களுக்கு எதிராக எதற்காக போராட்டங்கள்? உங்கள் அரசியல், வெறுப்பைத்தூண்டுகிறதை ஆதரியுங்கள் என்பதுதான்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்