< Back
தேசிய செய்திகள்
காங்கிரசில் ஒருவர் கூட கட்டுப்பாட்டில் இல்லை - மத்திய மந்திரி கபில் பாட்டீல்
தேசிய செய்திகள்

காங்கிரசில் ஒருவர் கூட கட்டுப்பாட்டில் இல்லை - மத்திய மந்திரி கபில் பாட்டீல்

தினத்தந்தி
|
2 Oct 2022 2:57 AM IST

காங்கிரசில் ஒருவர் கூட கட்டுப்பாட்டில் இல்லை என்று மத்திய மந்திரி கபில் பாட்டீல் கூறினார்.

வீழ்த்த முயற்சி

மத்திய மந்திரி கபில் பாட்டீல் நேற்று கல்யாணில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் நடந்து வரும் தலைவர் பதவிக்கான தேர்தலை விமர்சித்தார்.

அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் மற்றவர்களை வீழ்த்த முயற்சி செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் புதிய வேட்பாளர்கள் பற்றி கேள்வி படுகிறோம்.

கட்டுப்பாட்டில் இல்லை

காங்கிரசில் ஒருவர் கூட கட்டுப்பாட்டில் இல்லை. பா.ஜனதாவில் எந்தவித சர்ச்சையும் இன்றி தலைவர் பதவிக்கான தேர்தல் கட்டுப்பாட்டுடன் நடந்தது.

காங்கிரஸ் கட்சி துண்டு, துண்டாக உடைந்து கொண்டு இருக்கும் நேரத்தில் ராகுல் காந்தி 'பாரத் ஜோடா யாத்திரை' மேற்கொண்டு வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்