39 வயதில் பிரபல் நடிகர் மாரடைப்பால் மரணம்....!
|மாரடைப்பின் காரணமாக கன்னட நடிகர் நிதின் கோபி மரணித்துள்ளார்.
பெங்களூரு,
'ஹலோ டாடி' படத்தில் டாக்டர் விஷ்ணுவர்தனுக்கு மகனாக நடித்தவர், கன்னட நடிகர் நிதின் கோபி. இந்த படத்தின்மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய அளவில் புகழ் பெற்றவர். இது அவரை மேலும் நடிக்கத் தூண்டியதால் முத்தினந்த ஹெந்தி, கேரளிடா கேசரி மற்றும் நிஷப்தா போன்ற முக்கிய கன்னட படங்களில் நடித்தார்.
மேலும் இயக்கம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பு என பல வடிவங்களில் தனது திறமையினைப் பார்வையாளர்களுக்குக் காட்டினார். இதில் ஸ்ருதி நாயுடு தயாரித்த 'புனர் திருமண' சீரியலும் அடங்கும். நல்ல டிஆர்பி காரணமாக இவருக்கு பக்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிறைய வழங்கப்பட்டன. அவர் 'ஹர ஹர மஹாதேவ்' படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது நிதின் கோபி, திடீர் என நெஞ்சுவலியால் அவதிபட்டநிலையில் மருத்துவமனைக்கு சென்றார். சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அவர் பெங்களூரு இட்டமடுவில் உள்ள அவரது இல்லத்தில் திடீர் என மரணமடைந்தார்.
அவரது மறைவுக்கு நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நிதின் கோபிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளில், மாரடைப்பு காரணமாக கன்னட திரையுலகம் புனித் ராஜ்குமார், லக்ஷ்மண், மந்தீப் ராய், புல்லட் பிரகாஷ் உட்பட பல நடிகர்களை இழந்துள்ளது. இதுபோல் சம்பத் ராஜிவும் தற்கொலை செய்து கொண்டது நினைவுக்கூறக்தக்கது.அந்த வரிசையில் மேலும் ஒரு இளம் நடிகர்