< Back
தேசிய செய்திகள்
பீகார்: பா.ஜனதா கூட்டணி எம்.பி. ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியில் சேர்ந்தார்

image courtesy: PTI

தேசிய செய்திகள்

பீகார்: பா.ஜனதா கூட்டணி எம்.பி. ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியில் சேர்ந்தார்

தினத்தந்தி
|
22 April 2024 12:00 AM GMT

மெகபூப் அலி கெய்சர், நேற்று ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

பாட்னா,

பீகார் மாநிலத்தில் கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் ககாரியா தொகுதியில் பா.ஜனதா கூட்டணியில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் எம்.பி. ஆனவர் மெகபூப் அலி கெய்சர். பீகாரில் பா.ஜனதா கூட்டணியின் ஒரே முஸ்லிம் எம்.பி. இவரே ஆவார். லோக் ஜனசக்தி கட்சி பிளவடைந்தபோது, முன்னாள் மத்திய மந்திரி பசுபதிகுமார் பராஸ் பக்கம் மெகபூப் அலி கெய்சர் சாய்ந்தார். அதனால், தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் அவருக்கு 'சீட்' தரவில்லை.

இதனால் அதிருப்தியில் இருந்த மெகபூப் அலி கெய்சர், நேற்று ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். கட்சியின் நிறுவனர் லாலுபிரசாத் யாதவையும் அவர் சந்தித்தார். ராஷ்டிரீய ஜனதாதளம் இன்னும் ஒரு தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அங்கு கெய்சருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று பேசப்படுகிறது.

மேலும் செய்திகள்