< Back
தேசிய செய்திகள்
கடூர் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்த  பெண் போலீஸ் பணியிடை நீக்கம்
தேசிய செய்திகள்

கடூர் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்த பெண் போலீஸ் பணியிடை நீக்கம்

தினத்தந்தி
|
12 Aug 2023 6:45 PM GMT

கடூர் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்த பெண் போலீசை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் உத்தரவிட்டார்.

சிக்கமகளூரு-

எம்.எல்.ஏ.வுக்கு எதிராக வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்த பெண் போலீசை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் உத்தரவிட்டார்.

பெண் போலீஸ்

சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் போலீஸ் லதா என்பவரை பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். அதன்பேரில் கடூர் போலீஸ் நிலையத்தில் இருந்து தரிகெரே போலீஸ் நிலையத்துக்கு லதா பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து தரிகெரே போலீஸ் நிலையத்தில் பணியில் சேர்ந்த பெண் போலீஸ் லதா, அங்குள்ள சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறில் ஈடுபட்டார்.

அதாவது ஆனந்த் எம்.எல்.ஏ.வின் உத்தரவின்பேரில் தான், தன்னை போலீசார் பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டதாக ஆத்திரம் அடைந்தார். இதனால் கோபம் கொண்டு அவர் சப்-இன்ஸ்பெக்டருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பணியிடை நீக்கம்

மேலும் அந்த பெண் போலீஸ், 'தேர்தல் பிரசாரத்தின் போது ஆனந்த் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களை பிடித்து மோட்டார் சைக்கிள்களை தாறுமாறாக ஓட்டியதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தேன். அதனால் நான் இப்போது பணி இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறேன். மேலும் எனக்கு ஏதாவது நேர்ந்்தால் அதற்கு ஆனந்த் எம்.எல்.ஏ. தான் முழு பொறுப்பு' என்று கூறி தனது வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார்.

அந்த பதிவு வைரலானது. இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்துக்கு தெரியவந்தது. உடனே அவர் பெண் போலீஸ் லதாவை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்தார். மேலும் அவர் பெண் போலீஸ் லதாவை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்