பெல்தங்கடியில் கபடி வீரர் தூக்குப்போட்டு தற்கொலை
|பெல்தங்கடியில் கபடி வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் என்ன?- என்பது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மங்களூரு-
தட்சிணகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா புதுவெட்டு பகுதியை சேர்ந்தவர் சுவராஜ் (வயது 24). இவர் உஜிரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். மேலும் கபடி வீரரான இவர் மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறந்த வீரராக வலம் வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை சுவராஜ் தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் குளிக்க சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் அவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் தர்மஸ்தலா போலீசார் விரைந்து வந்து, தற்கொலை செய்த சுவராஜ் உடலை மீட்டனர்.
பின்னர் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.