< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம்
|10 Aug 2022 7:02 PM IST
நீதிபதி உதய் உமேஷ் லலித், ஆகஸ்ட் 27-ல் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார்.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி உதய் உமேஷ் லலித் இந்தியாவின் 49வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி யு.யு.லலித்தை நியமிப்பதற்கான அறிவிப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வெளியிட்டார்.
தற்போது இந்திய தலைமை நீதிபதியாக உள்ள என்வி ரமணாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 26ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து நீதிபதி உதய் உமேஷ் லலித், ஆகஸ்ட் 27-ல் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார்.
நீதிபதி உதய் உமேஷ் லலித்தின் (யு.யு.லலித்) பெயரை தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஏற்கனவே பரிந்துரைத்து இருந்தார். யு.யு.லலித் நவம்பர் 8, 2022 அன்று 65 வயதில் ஓய்வு பெறுவதால் ஓய்வு பெறுவதற்கு முன் 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருப்பார்.