< Back
தேசிய செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலுக்கு அறுவை சிகிச்சை

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலுக்கு அறுவை சிகிச்சை

தினத்தந்தி
|
22 Feb 2023 1:25 AM IST

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலுக்கு நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் (வயது 64), வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததில் அவரது பித்தப்பையில் கற்கள் இருப்பது தெரியவந்தது. கற்களின் எண்ணிக்கை மற்றும் அளவைப் பார்த்த டாக்டர்கள் அவரை அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு பரிந்துரைத்தனர். இதையொட்டி அவர் டெல்லி சர் கங்காராம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரிடம் நலம் விசாரித்தார்.

இந்த நிலையில் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலுக்கு நேற்று பித்தப்பை அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் உடல்நிலை சீராக உள்ளது, அவர் ஒன்றல்லது இரு நாட்களில் 'டிஸ்சார்ஜ்' செய்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார் என ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்