< Back
தேசிய செய்திகள்
கோர்ட்டில் வழக்கு விசாரணையை ஏன் முன்னதாக தொடங்க கூடாது ? - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கேள்வி

Image Courtesy : PTI  

தேசிய செய்திகள்

கோர்ட்டில் வழக்கு விசாரணையை ஏன் முன்னதாக தொடங்க கூடாது ? - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கேள்வி

தினத்தந்தி
|
15 July 2022 4:54 PM IST

காலை 9 மணிக்கு நீதிமன்றத்தை தொடங்க வேண்டும் என நீதிபதி யு.யு.லலித் பேசியுள்ளார்.

புதுடெல்லி,

காலை ஏழு மணிக்கு குழந்தைகளே பள்ளிக்குச் செல்லும் போது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஏன் ஒன்பது மணிக்கு வேலை நேரங்களை தொடங்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி யு.யு.லலித் கேள்வி எழுப்பியுள்ளார்.

வழக்கமாக சுப்ரீம் கோர்ட்டு அமர்வு காலை 10:30 மணிக்கு தொடங்கும். இந்த நிலையில் நீதிபதி யு.யு.லலித் அடங்கிய அமர்வு இன்று வழக்கத்திற்கு மாறாக ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வழக்குகளை விசாரிக்கத் தொடங்கியது. இந்த அமர்வில், நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

அப்போது பேசிய நீதிபதி, " என் பார்வையில், நாம் காலை 9 மணிக்கு நீதிமன்றத்தை தொடங்க வேண்டும். எங்கள் பிள்ளைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்குச் செல்லலாம் என்றால், நாம் ஏன் காலை 9 மணிக்கு பணிகளை தொடங்க கூடாது. இதை நான் எப்போது இருந்தோ கூறி வருகிறேன்.

அமர்வுகள் காலை 9 மணிக்குத் தொடங்கி, 11.30 மணி வரை நடத்தப்படலாம். பின்னர் அரை மணி நேர இடைவெளிக்கு பிறகு மீண்டும் 12 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு முடிக்க வேண்டும். இதனால் மாலை நேரங்களில் அடுத்த நாளுக்கான வழக்குக் கோப்புகளைப் படிக்க அதிக நேரம் கிடைக்கும்" என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்