அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் முறையீடு...!
|டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சி.வி.சண்முகம் எம்.பி. இன்று சந்தித்தார்.
புதுடெல்லி,
அதிமுக பொதுக்குழு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக இதுவரை யாரும் எங்களை அணுகவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து சி.வி.சண்முகம் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று சந்தித்தார். அப்போது, ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் முறையிட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இடைத்தேர்தலை அறிவிக்க 6 மாதம் அவகாசம் இருந்த போதிலும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அவசர அவசரமாக அறிவித்தது ஏன். இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளது என்று கூறினார்.