< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து பா.ஜனதா பொறுப்பாளர்களுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து பா.ஜனதா பொறுப்பாளர்களுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை

தினத்தந்தி
|
28 Sept 2022 1:05 AM IST

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து பா.ஜனதா பொறுப்பாளர்களுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரிகள் விஜய் ருபானி, பிப்லப்குமார் தேவ், பொதுச்செயலாளர்கள் அருண் சிங், வினோத் தவ்டே, தருண்சுக் மற்றும் சுனில் பன்சால், சம்பித் பத்ரா ஆகியோர் சமீபத்தில் பல்வேறு மாநிலங்களின் பா.ஜனதா பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் அவர்களுடன் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று ஆலோசனை நடத்தினார். கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனையில், பா.ஜனதா பொதுச்செயலாளர் (அமைப்பு) சந்தோஷ் பங்கேற்றார்.

அந்தந்த மாநிலங்களில் பா.ஜனதாவை வலுப்படுத்துவது பற்றியும், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்