< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ராஜஸ்தானில் இந்தியா, எகிப்து கூட்டு போர்ப்பயிற்சி
|22 Jan 2023 4:49 AM IST
ராஜஸ்தானில் இந்தியா, எகிப்து படைகள் கூட்டு ராணுவ போர்ப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் ஜெய்சால்மரில் இந்திய, எகிப்து படைகள் முதல் முறையாக கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.கடந்த 14-ந் தேதி தொடங்கி நடந்து வருகிற இந்த போர்ப்பயிற்சிக்கு 'பயிற்சி புயல்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது.இது இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பை நோக்கமாக கொண்டு நடத்தப்படுகிறது.
இரு தரப்பும் பயங்கரவாத எதிர்ப்பு, உளவு, சோதனை மற்றும் பிற சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, பாலைவன நிலப்பரப்பில் சிறப்பு படைகளின் தொழில்முறை திறன்கள் மற்றும் செயல்பாட்டுத்தன்மை ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்துகின்றன.இந்த கூட்டு போர்ப்பயிற்சி 14 நாட்கள் நடக்கிறது.