ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன், திரவுபதி முர்முவுக்கு ஆதரவு
|ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன், திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ராஞ்சி,
இந்தியாவின் உயர்பதவியான ஜனாதிபதி பதவிக்கு வருகிற 18-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் திரவுபதி முர்முவுக்கு, கூட்டணியில் இல்லாத பல்வேறு கட்சிகளும்கூட ஆதரவை தெரிவித்து வருகின்றன. மராட்டியத்தில் முன்னாள் முதல்-மந்திரியும், சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரேவும் சில தினங்களுக்கு முன்பு, திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும், முர்முவுக்கு தனது ஆதரவை தருவதாக நேற்று அறிவித்து உள்ளது. காங்கிரசை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்தி மோர்ச்சா அமைப்பு முர்முவுக்கு ஆதரவை தெரிவித்து இருப்பது, காங்கிரசாருக்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியினருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.