< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காஷ்மீரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு ரத்து - முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு
|9 July 2022 2:25 AM IST
காஷ்மீரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமன தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் 1,200 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமனத்துக்காக தேர்வு நடந்தது. இந்த தேர்வை 1 லட்சம் பேர் எழுதினர். அதில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
ஆனால் இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. தேர்வு எழுதியவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அந்த தேர்வை ரத்து செய்து காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்கா உத்தரவிட்டார். மேலும் இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.