< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
50 நகரங்களில் ஜியோ 5ஜி தொடக்கம்... ரிலையன்ஸ் ஜியோ அதிரடி!
|24 Jan 2023 10:19 PM IST
நாடு முழுவதும் இன்று முதல் 50 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கி உள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
இன்று முதல் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவைகள், 184 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 2022 அக்டோபரில் இந்தியாவில் முதல் முறையாக 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த ஆண்டு இறுதியில் இந்தியா முழுவதும் 5ஜி சேவைகள் விரிவுபடுத்தப்படும் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்து உள்ளது.