< Back
தேசிய செய்திகள்
பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவியை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம்
தேசிய செய்திகள்

பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவியை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் - 5 பேர் வெறிச்செயல்

தினத்தந்தி
|
20 Sept 2024 3:42 PM IST

மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

குந்தி:

ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவி (வயது 16), பள்ளியில் இருந்து வீடு திரும்பியபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்த மாணவியை, தேசிய நெடுஞ்சாலை அருகே வழிமறித்த 10 பேர் கொண்ட கும்பல், மாணவியை அங்கிருந்து அருகில் உள்ள புதருக்குள் இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர் 5 பேர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றி அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் குந்தி துணைக் கோட்ட காவல் அதிகாரி வருண் ரஜக் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்