< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பள்ளி விடுதியில் சாப்பிட்ட 100 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு
|29 Sept 2023 12:28 AM IST
ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளி விடுதி ஒன்றில் சாப்பிட்ட 100 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலம், பகுர் மாவட்டம் ஜகாரியாவில் தனியார் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. பள்ளி விடுதியில் இரவு மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்கள் ஒவ்வொருவராக வயிறு வலிக்கிறது என கூறி உள்ளனர். இவ்வாறு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நிலை சரியில்லாமல் போனது.
உடனடியாக, பாதிக்கப்பட்ட மாணவர்களில் 65 பேர் மேற்கு வங்காள மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் ராம்பூர்காட்டில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். 45 பேர் பகுரியா சுகாதார மையத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
தற்போது மாணவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்