< Back
தேசிய செய்திகள்
மத்திய அரசிடம் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசி கேட்கிறது, ஜார்கண்ட்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

மத்திய அரசிடம் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசி கேட்கிறது, ஜார்கண்ட்

தினத்தந்தி
|
9 April 2023 2:22 AM IST

மத்திய அரசிடம் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகளை ஜார்கண்ட் மாநில அரசு கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஞ்சி,

நமது நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தங்கள் மாநிலத்துக்கு 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜார்கண்ட் மாநிலம் முன் வைத்துள்ளது.

நேற்று முன்தினம் கொரோனா பரவல் குறித்து மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதார மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தியபோது, இந்தக் கோரிக்கையை ஜார்கண்ட் சுகாதார மந்திரி பன்னா குப்தா வைத்தார்.

அப்போது அவர் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியாவிடம், "ஜார்கண்டில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை. 2 வாரங்களுக்கு முன்பு 50 ஆயிரம் தடுப்பூசிகள் வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தோம். ஆனால் இன்னும் கொரோனா தடுப்பூசிகள் வந்து சேரவில்லை" என குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்