< Back
தேசிய செய்திகள்
ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்

தினத்தந்தி
|
10 Nov 2022 7:26 AM IST

ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

ராஞ்சி,

ஜார்கண்டில் சட்ட விரோத சுரங்க முைறகேடு தொடர்பாக முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். கடந்த 3-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக கூறியிருந்த நிலையில், சோரன் ஆஜராகவில்லை.

இதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் வருகிற 17-ந்தேதி ராஞ்சியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு கோரப்பட்டு உள்ளது.

ஏற்கனவே அனுப்பியிருந்த சம்மன் தொடர்பாக அமலாக்கத்துறையை குறை கூறியிருந்த ஹேமந்த் சோரன், தன்னை கைது செய்ய தயாரா? என சவால் விட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்