< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜார்கண்ட்; கலை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் மீது கார் மோதி விபத்து..3 பேர் பலி..!
|29 Aug 2023 12:59 PM IST
கலை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தின் சதன்வா கிராமத்தில் நள்ளிரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சதன்வா கிராமத்தில் ஒரு கிராம கோவிலில் கலை நிகழ்ச்சி எற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கலை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பியவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர். காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கு காரணமானவரை தேடி வருகின்றனர்.