< Back
தேசிய செய்திகள்
மூதாட்டியிடம் நகை பறிப்பு; மர்மநபருக்கு வலைவீச்சு
தேசிய செய்திகள்

மூதாட்டியிடம் நகை பறிப்பு; மர்மநபருக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
10 Sept 2022 8:49 PM IST

சிக்பள்ளாப்பூர் அருகே, மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கோலார் தங்கவயல்;


சிக்பள்ளாப்பூர் தாலுகா பைலப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடம்மா(வயது 80). அவர் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் வெங்கடம்மா முன் வந்து முகவரி கேட்பது போல் சகஜமாக பேசியுள்ளார்.

இந்த நிலையில் வெங்கடம்மாவின் கவனத்தை திசை திருப்பி அவர் கழுத்தில் அணிந்திருந்த ரூ.1½ லட்சம் தங்கநகையை பறித்து விட்டு சென்றார். இதைபார்த்து அதிா்ச்சி அடைந்த மூதாட்டி திருடன்...திருடன்... என கூச்சலிட்டுள்ளார். இவரது சத்தம்கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.

அதற்குள் மர்மநபர் தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து வெங்கடம்மா சிக்பள்ளாப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்