உலக பணக்காரர்கள் பட்டியலில் எந்த இடத்தில் அம்பானி,அதானி?
|அமேசான் நிறுவனர் பெசோஸ்ஸின் சொத்து மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
புதுடெல்லி,
உலக பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலை ‛புளூம்பெர்க்' நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, 200 பில்லியன் டாலர் சொத்துகளுடன் அமேசான் நிறுவனர் பெசோஸ் மீண்டும் முதலிடத்தில் உள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க் 198 பில்லியன் டாலர்களுடன் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
197 பில்லியன் டாலர் சொத்துகளுடன் ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் லூயி வுய்டன் நிறுவனத்தின் சி.இ.ஓ. பெர்னார்ட் அர்னால்ட் 3வது இடத்தில் இருக்கிறார்.
179 பில்லியன் டாலர் சொத்துகளுடன் மெட்டா சி.இ.ஓ. மார்க் மார்க் ஜுக்கர்பெர்க் 4வது இடத்திலும்,150 பில்லியன் டாலர் சொத்துகளுடன் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் 5வது இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 115 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 11வது இடத்திலும், அதானி குழும தலைவர் அதானி 104 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 12வது இடத்திலும் உள்ளனர்.