< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜீப்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பரிதாப சாவு
|22 Jun 2022 3:07 AM IST
விஜயாப்புரா அருகே ஜீப்-கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
விஜயாப்புரா:
விஜயாப்புரா தாலுகா அடஹலி கிராமத்தில் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளும், ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற அடஹலி கிராமத்தை சேர்ந்த பிரதீப் (வயது 18), அவரது நண்பர் அனில் (18) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்து விஜயாப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவான ஜீப் டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.