< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பீகாரில் கல்வித்துறை அலுவலகங்களில் ஜீன்ஸ் அணிய தடை
|30 Jun 2023 2:34 AM IST
கல்வித்துறை அலுவலக ஊழியர்கள் ஜீன்ஸ்- டீ ஷர்ட் உடை அணிந்து வர தடை விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாட்னா,
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஜனதாதளம்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்குள்ள கல்வித்துறை இயக்குனரகம், நேற்று முன்தினம் ஜீன்ஸ்- டீ ஷர்ட் உடை அணிந்து அலுவலகம் வர ஊழியர்களுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கல்வித்துறை வளாகத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், கலாசாரத்திற்கு முரணான உடைகளை அணிந்து வரக்கூடாது. அலுவலகங்களுக்கு முறையான மிடுக்கான உடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பீகார் அரசு, 2019-ம் ஆண்டிலேயே தலைமைச் செயலக அலுவலர்கள், ஊழியர்கள் ஜீன்ஸ் - டீ ஷர்ட் அணிந்து அலுவலகம் வர தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.