பாலியல் சர்ச்சை; பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய குமாரசாமி முடிவு
|பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார்கள் பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி கட்சிகளுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது
பெங்களூரு,
முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி ரேவண்ணா எம்.எல்.ஏ.வின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது. அவர் தொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த பாலியல் புகார் குறித்து விசாரிக்க எஸ்.ஐ.டி. குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகத்தில் முதல்கட்ட தேர்தல் முடிவடைந்து, 2-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சம்பவம் எழுந்துள்ளது. இது பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி கட்சிகளுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யை ஜனதா தளம்(எஸ்) கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக குமாரசாமி கூறியுள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யாக இருப்பதால் கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுகுறித்து அவரிடம் பேசியுள்ளேன் என்று குமாரசாமி கூறினார். அனேகமாக அவர் மீதான நடவடிக்கை குறித்த அறிவிப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.