< Back
தேசிய செய்திகள்
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்தநாள்- பிரதமர் மோடி மரியாதை

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்தநாள்- பிரதமர் மோடி மரியாதை

தினத்தந்தி
|
14 Nov 2022 11:42 AM IST

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்தநாளை முன்னிட்டு, நாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.

புதுடெல்லி,

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடமான சாந்தி வேனில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தும் வகையில், நாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்ந்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், " அவரது பிறந்தநாளில், நமது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு எனது மரியாதை. நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவு கூர்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் செய்திகள்