மாநிலங்களவை குழுக்கள் மாற்றியமைப்பு: நெறிமுறைக்குழு தலைவராக பிரகாஷ் ஜவடேகர் நியமனம்
|மாநிலங்களவை குழுக்களை, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று மாற்றியமைத்தார்.
புதுடெல்லி,
மாநிலங்களவை குழுக்களை, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மாற்றியமைத்துள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
* மாநிலங்களவை நெறிமுறைகள் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக முன்னாள் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உறுப்பினர்களாக டெரக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ்), ஜெய்ராம் ரமேஷ் (காங்கிரஸ்), சஸ்மித் பத்ரா (பிஜூஜனதாதளம்), விஜய்சாய் ரெட்டி (ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்) உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* மாநிலங்களவை பா.ஜ.க. மூத்த தலைவர் சி.எம். ரமேஷ், வீட்டு வசதிக்குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* மனுக்கள் குழு தலைவராக பிஜூ ஜனதாதளம் கட்சி எம்.பி. சுஜீத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
* அ.தி.மு.க. எம்.பி. எம்.தம்பித்துரை, உறுதிமொழிகள் குழு தலைவராகி உள்ளார்.
* மாநிலங்களவையில் தாக்கலாகிற ஆவணங்கள் குழுவுக்கு பா.ஜ.க.வின் காமக்ய பிரசாத் டாசா தலைவர்.
* பா.ஜ.க. தலைமைக்கொறடா லட்சுமிகாந்த் பாஜ்பாய், துணைச்சட்ட குழு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.