< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஒடிசாவில் ஆட்சி அமைப்போம் என பா.ஜனதா பகல் கனவு காண்கிறது: நவீன் பட்நாயக்
|6 May 2024 3:58 PM IST
ஜூன் 4ம் தேதி பிஜு ஜனதா தளம் அரசு காலாவதியாக போவதாக பிரதமர் மோடி பேசினார்.
புவனேஸ்வர்,
ஒடிசாவில் நாடாளுமன்ற தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் இரண்டு கட்டங்களாக வரும் மே 13 மற்றும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஒடிசாவில் இன்று பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, "ஜூன் 4ம் தேதி பிஜு ஜனதா தளம் அரசு காலாவதியாக போகிறது. அன்று நாங்கள் பா.ஜனதா சார்பில் முதல்-மந்திரி யார் என்று அறிவிப்போம். ஜூன் 10ம் தேதி பா.ஜனதா முதல்-மந்திரியுடன் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. ஒடிசாவில் முதன்முறையாக பா.ஜனதா ஆட்சி அமைய போகிறது." என்று பேசினார்.
இந்த நிலையில், ஒடிசாவில் ஆட்சி அமைப்போம் என பிரதமர் மோடி பேசியதை விமர்சித்த அம்மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக், ஒடிசாவில் ஆட்சி அமைப்போம் என பா.ஜனதா பகல் கனவு காண்கிறது என தெரிவித்துள்ளார்.