ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு தொண்டர்கள் தான் பலம்; தேவேகவுடா பேச்சு
|ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு தொண்டர்கள் தான் பலம் என்று தேவேகவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பெங்களூரு சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் பிரதமர் தேவேகவுடா முன்னிலையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இணைந்தனர். இதில் தேவேகவுடா பேசியதாவது:-
நாட்டின் அரசியலில் தேசிய அளவில் பல்வேறு விஷயங்கள் நடந்து வருகின்றன. அவற்றை மனதில் வைத்து நாம் நமது நடையை எடுத்து வைக்க வேண்டியுள்ளது. நாடடில் என்ன நடக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பிற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். நமது கட்சியை விட்டு சென்றவர்கள் விமர்சிக்கிறார்கள். ஆனல் நமக்கு தொண்டர்கள் தான் பலம். அந்த தொண்டர்களின் பலத்தின் அடிப்படையில் நாம் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வோம். அனைவரும் ஒற்றுமையாக உழைத்து ஜனதாதளம் (எஸ்) கட்சியை ஆட்சியில் அமர வைக்க வேண்டும். குமாரசாமி பஞ்சரத்னா யாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறார். ஜனதாதளம் (எஸ்) ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை மக்களுக்கு அவர் தெரிவித்து வருகிறார்.
இவ்வாறு தேவேகவுடா பேசினார்.