< Back
தேசிய செய்திகள்
பயங்கரவாத தாக்குதல்கள்: ஆலோசனை நடத்த காஷ்மீர் கவர்னர் உள்துறை அமைச்சகம் வருகை
தேசிய செய்திகள்

பயங்கரவாத தாக்குதல்கள்: ஆலோசனை நடத்த காஷ்மீர் கவர்னர் உள்துறை அமைச்சகம் வருகை

தினத்தந்தி
|
3 Jun 2022 8:01 AM GMT

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை குறிவைத்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக நேற்று ஒரேநாளில் காஷ்மீரில் வெளிமாநிலத்தை சேர்ந்த 2 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் வங்கி மேலாளர் ஆவார்.

இந்த தொடர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காஷ்மீர் பாதுகாப்பு தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் டெல்லியில் இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்ற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜம்மு-காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா இன்று டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்திற்கு வந்தடைந்தார். அதோபோல், இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், காஷ்மீர் போலீஸ் உயர் அதிகாரிகள், ராணுவ தளபதிகள், உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் செய்திகள்