< Back
தேசிய செய்திகள்
ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல்; மேலும் 29 வேட்பாளர்களை அறிவித்தது பா.ஜ.க.
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல்; மேலும் 29 வேட்பாளர்களை அறிவித்தது பா.ஜ.க.

தினத்தந்தி
|
27 Aug 2024 4:54 PM IST

ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு மேலும் 29 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. அறிவித்துள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 90 இடங்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு வரும் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1-ம் தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக்டோபர் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் தற்போது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. காஷ்மீர் தேர்தலில் காங்கிரசும் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில், பா.ஜ.க. சார்பில் மேலும் 29 பேரின் பெயர்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 45 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்