< Back
தேசிய செய்திகள்
ஜம்மு-காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியீடு
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியீடு

தினத்தந்தி
|
29 Aug 2024 4:29 PM IST

ஜம்மு-காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 90 இடங்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு வரும் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1-ம் தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக்டோபர் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இதில் 25-ந்தேதி நடைபெறும் 2-ம் கட்ட தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. ஸ்ரீநகர், கந்தர்பால், பட்கம், பூஞ்ச், ரஜோரி மற்றும் ரீசி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 26 சட்டசபை தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 5-ந்தேதி தொடங்கும் என்றும், 6-ந்தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெற செப்டம்பர் 9-ந்தேதி கடைசி நாளாகும்.

மேலும் செய்திகள்