< Back
தேசிய செய்திகள்
ஜெய்சங்கருடன் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு
தேசிய செய்திகள்

ஜெய்சங்கருடன் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு

தினத்தந்தி
|
30 March 2024 3:30 AM IST

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

டெல்லி,

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவரும் நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாததால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரியோ குலிபா அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, ரஷியா-உக்ரைன் போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்