< Back
தேசிய செய்திகள்
இந்திய - இந்தோனேசிய வெளியுறவுத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை
தேசிய செய்திகள்

இந்திய - இந்தோனேசிய வெளியுறவுத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை

தினத்தந்தி
|
21 May 2022 5:01 AM IST

இந்திய - இந்தோனேசிய வெளியுறவுத்துறை மந்திரிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

புதுடெல்லி,

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் நேற்று இந்தோனேசிய வெளியுறவுத்துறை மந்திரி ரீட்னோ முர்சுடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது இருநாட்டு உறவை வலுப்படுத்தல், ஜி 20 அமைப்பில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதேபோல், ஈரான் வெளியுறவுத்துறை மந்திரியுடனும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் செய்திகள்