< Back
தேசிய செய்திகள்
ராகுல் காந்தியின் நடைபயணத்தில் குழந்தைகள் தவறாக பயன்படுத்தப்பட்டனர் என்பது பொய் - ஜெய்ராம் ரமேஷ்
தேசிய செய்திகள்

ராகுல் காந்தியின் நடைபயணத்தில் "குழந்தைகள் தவறாக பயன்படுத்தப்பட்டனர்" என்பது பொய் - ஜெய்ராம் ரமேஷ்

தினத்தந்தி
|
11 Oct 2022 11:25 AM GMT

யாத்திரையின் போது குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டனர் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டனர் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

பாரத் ஜோடோ யாத்திரையின் போது குழந்தைகளை தவறாக பயன்படுத்துவதன் மூலம் காங்கிரஸ் சட்டத்தை மீறுகிறது. ஆகவே இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்குமாறு தேர்தல் ஆணையத்தை குழந்தைகள் உரிமை அமைப்பு கேட்டுக் கொண்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ள புகாரை 'முழு பொய்' என்று வர்ணித்துள்ளார். அவர் கூறியதாவது:-

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய செய்தித் தொடர்பாளர் என்ன செய்ய வேண்டும் என்பதை அவருக்கு அறிவுறுத்தும் சில நபர்களின் பேச்சை அவர் பின்பற்றுகிறார். இந்த போலிப் புகார் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளோம்.

ஓவியப் போட்டிக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டு, அதன் பரிசு வழங்கும் விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு குழந்தைகளிடம் ராகுல் காந்தி கேட்கவில்லை.

2007இல் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தொடங்கப்பட்டதிலிருந்து, ஆணையத்திற்கு 'பாஜக-ஆர்எஸ்எஸ் பிரமுகர்' ஒருவர் தலைமை தாங்குவது இதுவே முதல் முறை என்று கூறினார்.

மேலும் செய்திகள்