< Back
தேசிய செய்திகள்
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
தேசிய செய்திகள்

ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தினத்தந்தி
|
29 April 2024 6:11 PM IST

ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயில் மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலையடுத்து விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர், போலீசார் இணைந்து விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர்.

சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, ஜெய்ப்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த 26ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து விமான நிலையம் முழுவதும், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி விமான நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்தனர். அதன் பின்னர், விசாரணையில் அந்த அழைப்பு வெறும் போலி என தெரியவந்தது. ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்