< Back
தேசிய செய்திகள்
கர்நாடகாவில்  ஜெயின் துறவி கொடூர கொலை: முதல்-மந்திரி சித்தராமையா அதிர்ச்சி
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ஜெயின் துறவி கொடூர கொலை: முதல்-மந்திரி சித்தராமையா அதிர்ச்சி

தினத்தந்தி
|
8 July 2023 9:09 PM IST

பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த ஜெயின் மத துறவி ஆச்சார்யா ஸ்ரீ 108-வது காமகுமார மகாராஜா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு,

பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த ஜெயின் மத துறவி ஆச்சார்யா ஸ்ரீ 108-வது காமகுமார மகாராஜா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி ஆழ்குழாய் கிணற்றில் போட்டு மறைத்துள்ளனர்.

இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டு முதல்-மந்திரி சித்தராமையா அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பெலகாவி மாவட்டத்தில் ஜெயின்மத துறவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சட்டவிரோத செயலை செய்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள யாருக்கும் உரிமை இல்லை. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் அதிகாரிகள் இந்த வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தி சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தவறு செய்தவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்பாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு சித்தராாமையா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்