< Back
தேசிய செய்திகள்
போதையில் ரகளை - ஜெயிலர் பட வில்லன் கைது
தேசிய செய்திகள்

போதையில் ரகளை - 'ஜெயிலர்' பட வில்லன் கைது

தினத்தந்தி
|
24 Oct 2023 11:20 PM IST

'ஜெயிலர்' படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் விநாயகன், கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எர்ணாகுளம்,

'ஜெயிலர்' படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் விநாயகன், கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

முன்னதாக அவர் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் பிரச்சினை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அதன் பேரில் அவர் இன்று காவல் நிலையம் வந்துள்ளார். அப்போது அவர் காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவர் மது போதையில் இருந்ததை காவல் துறை அதிகாரி ஒருவர் உறுதி செய்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்