இந்தியாவின் கடைக்கோடி கிராமம் வரை சென்ற யுபிஐ; ஆனந்த் மகிந்திரா பாராட்டி டுவிட்
|மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தன் ட்விட்டர் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பின் வளர்ச்சியைப் பாராட்டியுள்ளார்
புதுடெல்லி,
பிரபல தொழில் அதிபரான ஆனந்த் மகிந்திரா அவ்வப்போது சுவாரசியம் மிக்க தகவல்களையும் வியக்கத்தக்க செயல்களையும் தனது டுவிட்டரில் பகிர்ந்து பாராட்டி பதிவிடுவது வழக்கம். அந்த வகையில், டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சென்று விட்டதை மெய்பிக்கும் வகையில் அமைந்துள்ள ஒரு நிகழ்வை சுட்டிக்காடி ஆனந்த் மகிந்திரா பதிவிட்டுள்ளார்.
உத்தரகாண்ட்டின் மலைக்கிராம் ஒன்றில் ல் உள்ள டீக்கடை ஒன்றில் யுபிஐ க்யூஆர் கோர்டு அட்டை வைக்கப்பட்டிருப்பதைப் புகைப்படம் எடுத்து 'இந்தியாவின் கடைசி டீக்கடை' என்று ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தன் ட்விட்டர் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பின் வளர்ச்சியைப் பாராட்டியுள்ளார். "ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம். இந்தப் புகைப்படம் இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைக் கட்டமைப்பின் வளர்ச்சியையும் பாய்ச்சலையும் காட்டுகிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.