< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஜெகதீப் தன்கர் ஆலோசனை

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஜெகதீப் தன்கர் ஆலோசனை

தினத்தந்தி
|
24 July 2023 8:43 PM GMT

நாடாளுமன்ற முடக்கம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஜெகதீப் தன்கர் ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. ஆனால் மணிப்பூர் விவகாரம் இரு அவைகளிலும் புயலை கிளப்பி வருவதால் 3-வது நாளாக நேற்றும் அவைகளின் அலுவல்கள் முடங்கின.

இதைத்தொடர்ந்து மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவர்களை அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷியும் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், பாரதிய ராஷ்டிர சமிதி சார்பில் கேசவ ராவ், பிஜூ ஜனதா தளம் சார்பில் சஸ்மித் பத்ரா, ஆம் ஆத்மியின் ராகவ் சத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ஜெக்தீப் தன்கர், மாநிலங்களவையின் சுமுக இயக்கத்துக்கு உதவுமாறு கட்சித்தலைவர்களை கேட்டுக்கொண்டதாக அவரது செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்