< Back
தேசிய செய்திகள்
ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சியமைப்பார்: மந்திரி ரோஜா பேட்டி
தேசிய செய்திகள்

ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சியமைப்பார்: மந்திரி ரோஜா பேட்டி

தினத்தந்தி
|
29 Jan 2024 7:47 PM IST

கூட்டணி தெளிவில்லாமல் சந்திரபாபு நாயுடு தள்ளாடிக் கொண்டிருப்பதாக ஆந்திர மாநில மந்திரி ரோஜா பேசினார்.

அமராவதி,

ஆந்திர மாநிலம் தடா அருகே அம்மாநில சுற்றுலாத்துறை சார்பாக புதிதாக விருந்தினர் மாளிகை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவில் அம்மாநில மந்திரி ரோஜா பங்கேற்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது; "கூட்டணி தெளிவில்லாமல் சந்திரபாபு நாயுடு தள்ளாடிக் கொண்டிருக்கிறார். 2024 தேர்தலுக்குப் பிறகு சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், சர்மிளா ஆகியோர் காணாமல் போய்விடுவார்கள்.

வருகின்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஜெகன் மோகன் ரெட்டிதான் ஆட்சி அமைப்பார்." இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்