< Back
தேசிய செய்திகள்
நான் காந்தியின் கொள்கைகளை பின்பற்றி வருகிறேன் - யாசின் மாலிக்
தேசிய செய்திகள்

நான் காந்தியின் கொள்கைகளை பின்பற்றி வருகிறேன் - யாசின் மாலிக்

தினத்தந்தி
|
25 May 2022 4:33 PM IST

நான் காந்தியின் கொள்கைகளை பின்பற்றி வருகிறேன் என்று காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியதாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவன் யாசின் மாலிக்கை தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்தது.

கைது செய்யப்பட்ட யாசின் மாலிக்கிடம் என்ஐஏ விசாரணை நடத்தியது. விசாரணைக்கு பின் யாசின் மாலிக் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். யாசின் மாலிக் மீதான வழக்கு டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பயங்கரவாத்திற்கு நிதி திரட்டியதாக பதியப்பட்ட வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி என சிபிஐ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளி யாசின் மாலிக்கிற்கு இன்று மாலை தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ கோர்ட்டில் இன்று காலை விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது கோர்ட்டில் பேசிய குற்றவாளி யாசின் மாலிக், ஆயுதங்களை கைவிட்ட பின்னர் நான் மகாத்மா காந்தியின் கொள்கைகளை பின்பற்றி வருகிறேன். அப்போது முதல் காஷ்மீரில் வன்முறையற்ற அரசியலை நான் பின்பற்றி வருகிறேன்' என்றார்.

மேலும் செய்திகள்