< Back
தேசிய செய்திகள்
தவறான உணவை சாப்பிட்டால், தவறான பாதையில் செல்வீர்கள்- மோகன் பகவத் பேச்சு
தேசிய செய்திகள்

தவறான உணவை சாப்பிட்டால், தவறான பாதையில் செல்வீர்கள்- மோகன் பகவத் பேச்சு

தினத்தந்தி
|
29 Sept 2022 10:48 PM IST

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், தவறான உணவை சாப்பிட்டால் தவறான பாதையில் செல்வீர்கள் என பேசினார்.

நாக்பூர்,

மக்கள் தவறான உணவை சாப்பிட்டால், தவறான பாதையில் செல்வார்கள் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார். இது தொடர்பாக நாக்பூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மோகன் பகவத் பேசியதாவது:

நீங்கள் தவறான உணவை சாப்பிட்டால், தவறான பாதையில் செல்வீர்கள் என்று கூறப்படுகிறது. 'தாமச' உணவை உண்ணாதீர்கள். (பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்படும் கிழங்கு போன்ற உணவுகள், இந்த தாமச உணவு வகையில் அடக்கம்).

மேற்கு இந்தியாவில் உள்ள மக்கள் இறைச்சி மற்றும் மீன் சாப்பிடுகிறார்கள். ஆனால் அவர்கள் வாரத்தின் சில நாட்களிலும், 'சவான்' நாட்களிலும் அசைவ உணவை உட்கொள்வதில்லை (சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்த மாதமாக கடைபிடிக்கப்படும் மாதம்). இறைச்சி உண்பதில் ஒழுக்கத்தை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள். அது மனதை ஒருமுகப்படுத்தும்." என்றார்.

மேலும் செய்திகள்