< Back
தேசிய செய்திகள்
குஜராத் தேர்தல் முடிவுகள் கர்நாடக சட்டசபை தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்; சி.டி.ரவி எம்.எல்.ஏ. கணிப்பு
தேசிய செய்திகள்

குஜராத் தேர்தல் முடிவுகள் கர்நாடக சட்டசபை தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்; சி.டி.ரவி எம்.எல்.ஏ. கணிப்பு

தினத்தந்தி
|
10 Dec 2022 12:15 AM IST

குஜராத் தேர்தல் முடிவுகள் கர்நாடக சட்டசபை தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில்...

பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரும், சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி நேற்று சிக்கமகளூருவில் உள்ள தனது வீட்டில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது. 7-வது முறையாக அங்கு ஆட்சியை பிடித்தது பெருமை அளிக்கும் விஷயமாகும். குஜராத் தேர்தல் முடிவுகள் கர்நாடக சட்டசபை தேர்தலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். காங்கிரஸ் கட்சியினர் பா.ஜனதாவையும், இந்திய தேசிய கொடியையும் அவமதிக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.

ஆம் ஆத்மி கட்சியை பார்த்து எங்களுக்கு பயம் இல்லை. காங்கிரசை போன்று தான் அந்த கட்சியையும் நாங்கள் பார்க்கிறோம். கர்நாடகத்தில் ஆம் ஆத்மி கட்சியால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

ெதன்இந்தியாவின் முக்கிய ஸ்தலம்

காசியை போன்று தத்தை குகை கோவிலையும் மாற்றியமைத்து வளர்ச்சி பணிகள் செய்யப்படும். தத்தா பாதத்திற்கு பூஜை செய்ய நிரந்தரமாக அர்ச்சகர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தத்தா கோவிலை தென் இந்தியாவின் முக்கிய ஸ்தலமாக மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் சந்திர திரிகோண மலையில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்